12 மணி நேர வேலை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தொழிலாளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
துதி பாடுபவர்களுக்கே வாய்ப்பு
மதுரைக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை என கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேசும் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேசினால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கண்ணியம் காப்பதில்லை என குற்றம்சாட்டினார்.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்.?
தமிழக சட்டமன்றம் ஜனநாயகம் முறையில் நடைபெறவில்லை எனவும் விமர்சித்தார். 12 மணி நேர வேலை சட்ட மசோதாவவை அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்ற மத்திய அரசு கூறியது எடப்பாடி பழனிச்சாமி மசோதாவை நிறைவேற்றவில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார். திமுக என்பது ரவுடி கட்சி, திமுகவில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. சபாநாயகர் சட்டமன்றத்தில் வாத்தியார் போல நடந்து கொள்வதாகவும், சட்டப்பேரவைத் தலைவர் போல நடந்து கொள்வதில்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைத்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு அதிமுகவில் ஒ.பி.எஸ் இணைத்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும்.
மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும்
அதிமுகவில் முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி அதிமுகவுக்கு திரும்பி வர வேண்டும் அதிமுகவை எதிர்ப்பது திமுகவுக்கே சாதகமாக அமையும், எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் போல எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக திமுகவை முழுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
PTR Audio: நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!