காவிரி உற்பத்தியாகும் குடகும், முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் தமிழ்நாடு உலகிலேயே செல்வம்மும், வளமமும் கொழிக்கும் நாடாக இருந்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வைகை அணை சாலைப்பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், இங்கே உள்ள முல்லைப்பெரியாறு அணையை பென்னிக்குக் என்ற பெருந்தகை கட்டினார். அதற்காக அவரது மனைவி தனது 300 பவுன் நகையை கழட்டி அணை கட்டுவதற்காக கொடுத்தார். நமது வறட்சியை போக்க நம்மை வளமாக்க அவர்கள் அணையை கட்டினார்கள்.
அணையை கட்டியது நமது முன்னோர்கள். அந்த அணை வெறும் சுண்ணாம்பும், மண்ணும் அல்ல. அவர்களது உழைப்பில் வியர்வையும், ரத்தமும், சதையுமாக இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. நாம் கட்டிய அணை நமக்கு பயன்படவில்லை. இப்போது இடுக்கி மாவட்டம் கேரளாவுக்கு சென்றதால் நாம் தண்ணீருக்கு அலைகிறோம். இது பேரவலம் நமது இடத்தை இழந்ததால் நமது பலத்தை இழந்தோம். அதே போல காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதியில் 90 விழுக்காடு தமிழர்களாக இருந்தார்கள், வாழ்ந்தார்கள்.
undefined
அரசு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு - போலீஸ் வலை வீச்சு
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தமிழ்நாட்டோடு இணையுங்கள் என்று போராடினார்கள். ஆனால் அவர்கள் கர்நாடகா மாநிலத்தோடு இணைக்கப்பட்டார்கள். இது வரலாற்றில் மிகப்பெரிய பிழை. காவிரி உற்பத்தியாகும் குடகும், முல்லைப் பெரியாறு உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ் நாட்டோடு இருந்திருந்தால் தமிழ்நாடு உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாகவும், வளம் கொழிக்கும் நாடாகவும் இருந்திருக்கும்.
திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு; காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை அளித்தால் அவர்கள் தீர்மானர்கள் ஆவார்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் இவர்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும். இலங்கையிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டதை போன்ற நிலை ஏற்படும். மணிப்பூரில் கலவரத்தை தடுக்காமல் இந்தியபிரதமரும், உள்துறை அமைச்சரும் மக்களின் சாவை ரசித்து கொண்டிருக்கின்றனர் என்றார்.