
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் அரசியலில் இல்லாததால் உருவாகியுள்ள வெற்றிடத்தைப் பிடிக்க ரஜினியும் கமலும் முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதிலும் ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்து சரமாரியாக விமர்சிப்பதில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஜெயலலிதா அரசியலில் இருந்தவரை ஒருவரும் அரசியல் பக்கம் தலைகாட்டவில்லை என தெரிவித்தார்.
தற்போது கருணாநிதி ஓய்வெடுத்துவிட்டார். ஜெயலலிதா உயிரோடவே இல்லை. இதனால் உருவாகியுள்ள வெற்றிடத்தை பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் மதிப்பது விஜயகாந்தை மட்டும்தான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தீவிர அரசியலில் இருந்தபோதே மக்கள் நலனுக்காக கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டது நானும் விஜயகாந்தும் மட்டும்தான். அந்த வகையில் எனக்கு விஜயகாந்தின் மேல் மட்டும்தான் எனக்கு மரியாதை உள்ளது.