
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டெம்பர் 21 ஆம் தேதியன்று,அதாவது இதே நாள் (21/9/17) சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் துவங்கி வைத்தார்
விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்தார் ஜெயலலிதா
ஜெயலலிதா கலந்துக்கொண்டு பேசிய கடைசி நிகழ்வு இதுதான். இதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதன் பின்னர், 74 நாள் கழித்து அவருடைய சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது .
மேலும் அன்றைய பொது நிகழ்ச்சியில் பேசிய போது கூட, சென்னையைஅதி நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்றும், அந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது என பெருமிதமாக பேசினார் ஜெயலலிதா.
இன்றுடன் ஜெயலலிதா கலந்துக்கொண்ட கடைசி நிகழ்வு என்று கணக்கிட்டு பார்த்தால், இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது.இந்த நாளை நினைவு கூர்ந்து, அவருடைய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர் அவருடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.