எனக்கு வீடே இல்லை, காலி பண்ண சொல்லிட்டாங்க.. மனைவி பிள்ளைகளுடன் எங்கு போவேன் என்று உருக்கமுடன் சீமான் பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
எனக்கு வீடே இல்லை, காலி பண்ண சொல்லிட்டாங்க.. மனைவி பிள்ளைகளுடன் எங்கு போவேன் என்று உருக்கமுடன் சீமான் பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
undefined
கடலூரில் நாம் தமிழர் நிர்வாகியான மறைந்த கடல்தீபன் பட திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கடல்தீபன் மற்றும் கட்சியில் மறைந்த இன்னபிற நிர்வாகிகள் பற்றி நினைவலைகளை புகழ்ந்த சீமான், இப்போது தமது நிலைமை எப்படி உள்ளது என்பது பற்றியும் பேசி நாம் தமிழர் தம்பிகளை அதிர வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது: எனக்கு வீடே கிடையாது யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். உண்மையிலே எனக்கு வீடு இல்லை. நம்ப மறுக்கிறாங்க. காலி பண்ணணும் அடுத்த மாதம்.
என் மனைவி, 2 பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்கே போறது? நானும் என் மனைவியும் ஒரு சின்ன குடும்பம். நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம்.
ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்க கொண்டு போய் போடறது? எந்த வீட்டில் கொண்டு போய் வச்சாலும் வீடு தரமாட்டான்.
உங்களுக்கு தெரியுமா? கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில் இருந்து எந்த விடுதியிலும் எனக்கு தங்க இடம் கொடுக்க மாட்டாங்க.
இப்போ எனக்கு வாழறதுக்கு வீடு இல்லை… நாட்டையே ஆள துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம்.
ஆனா திருட்டுத்தனமாக ரயில் ஏறி வந்த கருணாநிதிக்கு எவ்வளவு சொத்து இருக்கு? அது எப்படி வந்தது அப்படின்னு கேட்டிருக்கணும், ரயில் டிக்கெட்டுக்கு கூட காசில்லாம வந்து எங்கேயிருந்து இவ்வளவு சொத்து வந்தது.
தம்பி உதயநிதி தொடர்ந்த திரைப்படங்களாக எடுக்கிறார். எதுவும் ஓடவே இல்லை. ஆனா படம் எடுத்துக்கிட்டே இருக்கிறார். இதற்கு எல்லாம் எங்கு இருந்து பணம் வந்தது- இதை எல்லாத்தையும் நீங்க கேட்கணும்.
எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? எங்கேயிருந்து வருதுன்னு தெரியுது இல்ல? அதை பத்தி புலனாய்பு பண்ணுங்க.. ஜெய்பீம் படத்தை வச்சுகிட்டு 15 நாளாக எல்லா பிரச்னைகளையும் மூடி மறைச்சிட்டாங்க..
6 மாதத்தில் 6 பேர் நீட் தேர்வால் இறந்திருக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம் என்றார்களே? இப்போது என்ன நடவடிக்கை என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை என்று பேசி இருக்கிறார் சீமான்.
நாட்டையே ஆள துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம் 😂 pic.twitter.com/rxX29Kfwqo
— கபிலன் சிங்காரவேலு (@kabilan_velu)