இந்த வீரத்த உன்ன வெட்டுன பாமக கும்பலிடம் காட்டி இருக்கலாமே.. குரு மகனை பங்கமாய் கலாய்த்த வன்னியரசு..!

Published : Nov 23, 2021, 07:50 AM ISTUpdated : Nov 23, 2021, 07:53 AM IST
இந்த வீரத்த உன்ன வெட்டுன பாமக கும்பலிடம் காட்டி இருக்கலாமே.. குரு மகனை பங்கமாய் கலாய்த்த வன்னியரசு..!

சுருக்கம்

இந்த மாதிரி காலிப்பயல்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இந்த வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்து, தமிழக காவல்துறைக்கும் டேக் செய்துள்ளார். 

நாளைக்கு அப்பறம் ஒரு தலையை காணோம், கையை காணோம். காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க என காடுவெட்டி குருமகன் கனலரசனை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வன்னியரசு தமிழக போலீசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெய் பீம் படம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காடுவெட்டி குருமகன் கனலரசன் மிரட்டும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பெரிய ஞானியா சவுக்கு சங்கர். தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்காதீங்க.. அவ்ளோதான் நான் சொல்லுவேன். எல்லாரும் ஒரு மைக் கிடைச்சதுக்காக, யாரை விமர்சனம் செய்கிறோம். என்ன விமர்சனம் செய்கிறோம் என்பதே தெரியாமல், உங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசறீங்களே, நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால், அப்போ உங்களால சமாளிக்க முடியுமா? இன்னைக்கு காடுவெட்டியாரை நேசிக்கிற, காடுவெட்டியாரின் தீவிர விசுவாசிகள் லட்சக்கணக்கான பேர் வெளியில் இருக்காங்க.

நாளைக்கு அப்பறம் ஒரு தலையை காணோம், கையை காணோம். காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க.. காவல்துறைக்கும் அதைதான் நாங்க சொல்றோம். நாளைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்ததுன்னா, எங்களை தேடி யாரும் வரவேணாம். ஏன்னா, நீங்க பேசற பேச்சு அப்படி இருக்கு" என்று வீடியோ முழுக்க மிரட்டல் விடுக்கும் பகையிலேயே உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குதான் விசிகவின் வன்னியரசு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 

 

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- "அடேங்கப்பா தலை வேறு, உடல் வேறாம். நல்லா காமெடி பன்றான். இந்த வீரத்த இவன வெட்டுன பாமக கும்பலிடம் சொல்லி இருக்கலாமே. தூண்டி விட்டு தாக்குதல் நடத்திய மருத்துவர் அய்யாவிடம் சொல்லி இருக்கலாமே. இந்த மாதிரி காலிப்பயல்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இந்த வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்து, தமிழக காவல்துறைக்கும் டேக் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!