என் வாழ்நாள் முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என ஜெயலலிதா தெரிவித்தார். அதேபோல செய்தும் காட்டினார். இப்போ எடுத்த முடிவு, காலம் தாழ்த்தி எடுத்த முடிவாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு
தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏற்கனவே அதிமுக அறிவிப்பு வெளியிட்ட போது எனது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.எனவவே பாஜக- காங்கிரஸ் நமது நிலத்திற்கு தேவையில்லை.
அந்த கட்சிகளுக்கு 10 இடம் 2 இடம் என வென்று கொடுப்பது எல்லாம் பயனற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் இந்த நிலத்தின் உரிமைக்காக ஏதாவது வகையில் போராடி உள்ளதா? காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை, அதற்காக கர்நாடகா காங்கிரஸை எதிர்த்து தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தி உள்ளதா. எதையும் செய்யவில்லை. அப்போ எதுக்கு தான் உள்ளீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாஜக எக்ஸ்ட்ரா லக்கேஜ்
எனது உயிருக்கு, உடமைக்கு எதற்கும் துணை நிற்காத உங்களுக்கு என்னுடைய ஓட்டு உங்களுக்கு எதுக்கு என கேள்வி எழுப்பினார். பாஜக என்பது தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ். கூடுதல் சுமையை சுமக்க வேண்டாம் என்று எடப்பாடி நினைக்கிறேன் அதைத்தான் இறக்கி வைத்தார். இது போன்ற முடிவை அதிமுக தான் தைரியமாக எடுக்கும். இதற்கு முன்னால ஜெயலலிதா அவர்கள் எடுத்தார். என் வாழ்நாள் முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என தெரிவித்தார். அதேபோல செய்தும் காட்டினார். இப்போ எடுத்த முடிவு, காலம் தாழ்த்தி எடுத்த முடிவாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது. இதே போன்ற முடிவை திமுக எடுக்குமா என கேட்டார்.
திமுக துணிவாக முடிவு எடுக்குமா.?
பேரறிஞர் அண்ணாவை குறை சொல்லி பேசியதற்காக அதிமுக இந்த முடிவு எடுத்தது. அதேபோல ஈழத்தில் தமிழர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை திமுக முறிக்குமா.? கச்சத்தீவை தான்தோன்றித்தனமாக கொடுத்ததும் காங்கிரஸ், மீத்தேன், ஜிஎஸ்டி, என் ஐ ஏ, நீட் இதையெல்லாம் கொண்டு வந்தது காங்கிரஸ் இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்து கூட நின்றது திமுக. தமிழகத்திற்கு கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் தரவில்லை, அதற்காகவாவது கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்குமா.? இது போன்ற துணிவான முடிவை திமுக எடுக்காது அதிமுக மட்டுமே எடுக்கும் என சீமான் தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D