தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய பெற்றியை ஈட்டும்.. இதில் எந்த ஐயமும் இல்லை.. ப.சிதம்பரம் சரவெடி.!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 8:16 AM IST
Highlights

தமிழக மக்கள் மத்தியிலேயே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது என வாக்களித்த பின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தமிழக மக்கள் மத்தியிலேயே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது என வாக்களித்த பின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல், ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தொடங்கி 19ம் தேதி வரை நிறைவு பெற்றது. இதனையடுத்து, மார்ச் 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்பின், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சூறாவளி பிரசாத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் இரவு, 7.00 மணியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 7.00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி இரவு 7.00 மணிக்கு முடிவடைகிறது. ஓட்டுச் சாவடிகளில், கையுறை மற்றும் கிருமி நாசினி என பல சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய பெற்றியை ஈட்டும் என்பதில் எந்த விதமான ஐயமும் கிடையாது. 

காரைக்குடி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு தரும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலேயே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது. ஆக, அந்த ஆர்வமும் தேவையும் இந்த தேர்தலில் பிரதிபலித்து மே மாதம் 2ம் தேதி வாக்குகள் எண்ணும் பொழுது நாங்கள் சொன்னது உண்மை, நாங்கள் சொன்னது மெய்பிக்கப்படும் என்பதை நாங்கள் அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

click me!