சீமான் மணியரசன் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சீமான் மணியரசன் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு எதிராக பேசி வரும் நிலையில் சுப வீரபாண்டியன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக திமுக திராவிட மாடல் என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் பேசி வரும் நிலையில் மறுபுறம் திராவிடம் என்பது ஒரு மாயை, எனவே அதை தகர்த்தெறிய வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைதோறும் பேசி வருகிறார். தமிழர்களை திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி இன உணர்வு இல்லாமல் மழுங்கடித்து விட்டார்கள் என்றும் அவர் கூறிவருகிறார்.மொத்தத்தில் திராவிடம் மற்றும் தமிழ் தேசியர்கள் இடையே வலுவான கருத்து மோதல் நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ஆர்.பி உதயகுமாருக்கு பாடை கட்டுவேன் என்றதில், என்ன தப்பு..?? சீனுக்கு வந்த ஓபிஎஸ் 2வது மகன்..
இதற்கு பதிலளித்து பேசிவரும் திராவிட இயக்கப் பற்றாளர்கள் தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் எனக் கூறி வருகின்றனர். அத்துடன் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திராவிடம் -தமிழ் தேசியம் என்பதை வெறுவெறு என பிரித்து குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியில் ஈடுபட்டுவருகிறது, இந்த சதியின் பின்னால் பாஜக இருக்கிறது, பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மறைமுகமாக மக்கள் மத்தியில் புகுத்தும் முயற்சியில் நாம் தமிழர் கட்சி இயங்கிவருகிறது என திராவிட இயக்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் அணியில் இணைகிறாரா நடிகை விந்தியா..? அவரே சொன்ன விளக்கம் இதோ...
இந்நிலையில்தான் திருச்சி மணப்பாறையில் திராவிட நட்பு கழகத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசுகிறார்கள், என்ன செய்வது கருத்தோடு இருப்பவர்கள் கருத்தாக இருப்பார்கள் வெறும் செருப்போடு இருப்பவர்கள் செருப்பாகத்தான் இருப்பார்கள், தமிழ்நாட்டில் திமுகவை மட்டுமல்ல அதிமுகவையும் காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டிற்கு என பாஜகவினர் சூத்திரம் வைத்துள்ளது.
அதாவது ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சி வலுவாக இருந்தால் அதில் இரண்டாவதாக இருக்கும் ஒரு கட்சியை அழித்து அந்த இடத்தில் பாஜகவை புகுத்து என்பதுதான் அவர்களின் சூத்திரம், அதன்படி தான் தற்போது அவர்கள் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், ஓபிஎஸ் இபிஎஸ் தானாக சண்டை போட்டுக் கொள்ளவில்லை அவர்கள் சண்டை போட்டுக் கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார்கள், அதிமுகவை அழித்து விட்டு பாஜகவை வளர்க்க முயற்சிக்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் திமுக மீது கை வைக்க முடியாது என்று.
நான் சொல்கிறேன் அவர்கள் தமிழகத்தில் இரண்டாவது இடம் மட்டுமல்ல 7வது இடத்தைகூட பிடிக்க முடியாது, தமிழகத்தில் எப்படியாவது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கட்சியை வளர்க்கலாம் என நினைக்கிறார்கள், அதற்கு துணையாக சில அமைப்புகளும் இருக்கிறார்கள், பெ. மணியரசன், சீமான் போன்றவர்கள் பாஜகவின் கைக்கூலிகள், முழுக்க முழுக்க அவர்கள் திராவிடத்தை எதிர்க்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜகவோடு இருந்தவன் யாரும் வாழ்ந்ததில்லை. இவ்வாறு சுப.வீ பேசினார்.