ஆர்.பி உதயகுமாருக்கு பாடை கட்டுவேன் என்றதில், என்ன தப்பு..?? சீனுக்கு வந்த ஓபிஎஸ் 2வது மகன்..

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2022, 2:07 PM IST
Highlights

சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமாருக்கு தொலைபேசி  வாயிலாக  மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமாருக்கு தொலைபேசி  வாயிலாக  மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ்-  இபிஎஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி  ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் ஆர்.பி உதயகுமார்,  உயிர் இருக்கும் வரை அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க முடியாது, அப்படி ஏற்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன், அவரின் வீட்டை சூறையாடுவேன் என ஆர். பி உதயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணர்ச்சி பொங்க பேசினார்.

இதையும் படியுங்கள்:  ஓபிஎஸ் அணியில் இணைகிறாரா நடிகை விந்தியா..? அவரே சொன்ன விளக்கம் இதோ...

இதனையடுத்து ஆர்.பி உதயகுமாரை தொலைபேசியில் அழைத்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் என்பவர்,  எப்போது தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு வரப் போகிறீர்கள்? அங்கு உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என கூறி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர், இதற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: ஆதி என்ற தலித்பெண்- பகவன் என்ற அந்தணர்க்கும் பிறந்தவர் திருவள்ளுவர்.?? வவேசு, RN ரவியை வச்சு செய்த கி.வீரமணி

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளில் ஒரு சில அரசியல்வாதிகள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் சுயநலவாதிகளின் ஏவல்காரர்களாக மனசாட்சி இல்லாமல் பொது சபைகளில் மிக அநாகரீகமாக பேசி வருகிறார்கள், அதில் ஒருவர் சில சம்பவங்கள் நடைபெற்று விட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், கழக ஒருங்கிணைப்பாளர் வீட்டைச் சூறையாடுவேன் என்றும் சட்டத்திற்கு புறம்பாக பேசியிருக்கிறார், அதற்கு பதிலடியாக கழகத் தொண்டர் ஒருவர் நீங்கள் தற்கொலை செய்துகொண்டால் நாங்கள் படைக்கட்ட தயாராக இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

இப்படி தக்க பதிலடி கொடுத்தால்தான் அடுத்து பேசுபவர்கள் வார்த்தைகளை கவனமாக உபயோகிப்பார்கள், இதில் முதல் தவறு எங்கு இருக்கிறது என்பதை மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன், ஆனால் தமிழக காவல்துறை கழக தொண்டனை மட்டும் இன்று கைது செய்து இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது, சட்டம் ஒழுங்கில் பாரபட்சம் காட்டும் தமிழக காவல்துறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிக்கு கழக உண்மை தொண்டன் ஜெயபிரதீப் என கூறப்பட்டுள்ளது. 
 

click me!