தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்... ஆசிரியர் சங்கம் கடிதம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 3, 2021, 10:42 AM IST
Highlights

கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும், எனக் கூறுகின்றனர். எனவே, ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மஹேஷ் கூறியிருந்தார். 

இந்நிலையில்,’’கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

click me!