போலந்து நாட்டில் இருந்து அருப்புக் கோட்டைக்கு வந்ந பார்சல்.107 குப்பிகளில் கொடிய விஷமுள்ள சிலந்திகள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 10:37 AM IST
Highlights

அப்போது போலாந்து நாட்டில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு வந்த பார்சல் மீது சந்தேகம் கொண்டு பிரித்து பார்த்தனர். அதில் 107 மருத்துவ குப்பிகளில் ஏதோ ஊர்ந்து செல்வதாக கண்டனர். 

போலந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திப்பட்ட வட அமெரிக்க, மெக்சிகோ நாட்டு சிலந்திகள் திருப்பி அனுப்ப நடவடிக்கை சென்னை பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர். 

அப்போது போலாந்து நாட்டில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு வந்த பார்சல் மீது சந்தேகம் கொண்டு பிரித்து பார்த்தனர். அதில் 107 மருத்துவ குப்பிகளில் ஏதோ ஊர்ந்து செல்வதாக கண்டனர். உடனே ஒரு குப்பியை பிரித்து பார்த்த போது அதில் சிலந்தி இருந்தது. எந்த வகையிலும் பாதிக்காமல் காற்று வசதியுடன் இருக்க 107 குப்பிகளை தயார் செய்து அதில் சிலந்திகள் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மத்திய வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். உயிரின அதிகாரிகள் வந்து சிலந்திகளை ஆய்வு செய்தனர். 

இந்த வகைவகை சிலந்திகள் மிகவும் கொடிய விஷமுள்ளது எனவும், வட மற்றும் மத்திய அமெரிக்காவிலும் மெக்சிகோ நாட்டிலும் வாழ கூடியது. வன உயிரினம் எனவும், இதுபோன்ற உயிரினங்களை சட்டப்படி உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வர கூடாது. இதனால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட கூடும் என்பதால் திருப்பி அனுப்பி விடுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சிலந்திகளை போலாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தபால் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு சென்று யாருக்கு வந்தது. எதற்காக சிலந்தியை கடத்தி வந்தார்கள் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 

click me!