சாதியை சொல்லி திட்டிய ராஜகண்ணப்பன்.. திமுக அமைச்சரை சுற்றுபோடும் தேசிய தாழ்தப்பட்டோர் நல ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 1, 2022, 1:38 PM IST
Highlights

முதுகுளத்தூரில் பிடிஓவை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர்  ராஜகண்ணப்பனிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

முதுகுளத்தூரில் பிடிஓவை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர்  ராஜகண்ணப்பனிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை இந்த விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஜகண்ணப்பன் நேரில்  ஆஜராகி  விளக்கம் அளிக்க உள்ளார்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சில அமைச்சர்கள் அதிகாரிகள், பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில்  நடந்துகொள்வது தொடர்பான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி இழிவு படுத்தியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்தது. அதில் அவர் போக்குவரத்து துறை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்: அனைத்து கட்சி கூட்டம்..! அதிமுக பெயர் பலகையை ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து தன் பக்கம் நைசாக நகர்த்திய ஜெயக்குமார்

அமைச்சர் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒருமையில் திட்டியதுடன், எஸ்சி, எஸ்சி என மீண்டும் மீண்டும் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், நீ எல்லாம் நான் சொல்வதைக் கேட்க மாட்டியா, சேர்மேன் சொன்னால் மட்டும்தான் கேட்பியா என தன்னை ஒருமையில் அவர் திட்டியதாகவும் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் புகார் கூறியிருந்தார்,57 வயதாகும் தன்னை இப்படி யாரும் கேட்டதில்லை என்றும், இதனால் தான் மன காயமடைந்திருப்பதாகவும், தூக்கமின்றி தவிப்பதாகவும், சாப்பிடகூட முடியவில்லை என்றும், வேதனை தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்லணும்.. சமரச பேச்சு இருக்கக்கூடாது.. ஆளுநர் ஆர்.என்.ரவி.!

இதுகுறித்து புரட்டி தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் விசாரணை தொடங்கியுள்ளார். அவர் முன்பு ராஜகண்ணப்பன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரகிறது

மேலும் இந்த புகார் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். ஏற்கனவே திமுகவினர் மீது பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சாதியை சொல்லி அமைச்சர் அதிகாரியை இழிவுப்படுத்தினார் என்ற விமர்சனம் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!