துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்லணும்.. சமரச பேச்சு இருக்கக்கூடாது.. ஆளுநர் ஆர்.என்.ரவி.!

By vinoth kumar  |  First Published Aug 1, 2022, 10:33 AM IST

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர். 


துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார் . 

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்;- வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஸ்டாலினும் மோடியும் சிரித்து பேசினால் உடனே கூட்டணியா.?? அசால்ட் செய்த கனிமொழி

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.  மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் கடந்த 8 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதலை தேசம் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது. முதலில் நம் அண்டை நாடுகள் நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை தெளிவாக உறுதி செய்ய வேண்டும். நம் நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர்.

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? உச்ச நீதிமன்ற கருத்தால் குஷியில் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

புல்வாமாவில்  பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக பாலக்கோட்டில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. நீங்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்தத் தாக்குதல் நடத்தியது. அப்படித்தானே ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்" என்றார். அதுபோல, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிற எச்சரிக்கைதான் தேவை. அதுபோன்று தான் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

click me!