அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு தகுதி இல்லை..! அப்போ...யார் அந்த புதிய தலைமை..?கே.சி.பழனிசாமி அதிரடி

By Ajmal Khan  |  First Published Aug 1, 2022, 9:10 AM IST

 அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்றும்,  10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என்று இருப்பதால், அந்த 20 மாவட்ட செயலாளர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்திருகின்றார்  என முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


சசிகலா-இபிஎஸ் செய்த தவறு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. ஏற்கனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் என தனி அணி உள்ளது. இதனால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். எதிர்கட்சியாக இருந்து ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டிய நிலையில், அதிமுகவில் ஒருவருக்குள் ஒருவர் மோதி வருவது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்னர்  பொதுச்செயலாளராக வேண்டும் என்பதற்காக சசிகலா செய்த அதே தவறை தான் தற்போது எடப்பாடி பழனிசாமி செய்துள்ளதாக தெரிவித்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை யார் பார்த்தார் என்பது தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே போட்டியாக உள்ளதாக குறிப்பிட்டார்.  பாஜக ஆசிர்வாதத்திற்கு இருவரும் ஏங்கி துடிக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

அதிமுக பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? உச்ச நீதிமன்ற கருத்தால் குஷியில் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

சாதி கட்சியாக அதிமுக..?

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் இன்னொரு ராமதாஸ் ஆக வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் தவிர எம்ஜிஆர் ஆக வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை என விமர்சித்தார். வெளிப்படையாக சாதிய அரசியலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செய்கிறார்கள். ஆனால், சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது அதிமுக என குறிப்பிட்டார்.  அதிமுக தலைமை பதவியை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் தகுதி இல்லை என கூறியுவர். இருவருமே திமுகவுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என்று தற்போது புதிய விதி விதித்திருப்பதால்  அந்த இருபது மாவட்ட செயலாளர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அளவிற்கு எடப்பாடி கொடுத்திருகின்றார் எனவும் தெரிவித்தார். தன்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக அதிமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கி வருகிறார் என்றும்  அப்படி செய்யாமல் அனைத்து தொண்டர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும் என கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

டிடிவி அணியில் இணைந்தாரா ஓபிஎஸ் ஆதரவாளர்...? அதிர்ச்சி அடைந்த அதிமுக...சையது கான் கூறிய புதிய விளக்கம்


 

click me!