மதத்தைக் காக்க கொலை செய்தேன்….கௌரி லங்கேஷ் கொலையாளி பகிரங்க வாக்கு மூலம்….

 
Published : Jun 17, 2018, 08:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
மதத்தைக் காக்க கொலை செய்தேன்….கௌரி லங்கேஷ் கொலையாளி பகிரங்க வாக்கு மூலம்….

சுருக்கம்

Save religion i was kill lankesh told killer pareausram

ஹிந்து மதத்தைக் காப்பாற்று வதற்காகவே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதாக போலீசாரிடம் சிக்கிய ஸ்ரீராம் சேனா இயக்கத்திச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வைச் சேர்ந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர், சாதி-மதப் பாகுபாடுகள் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். முற்போக்குச் சிந்தனையாளர். துணிச்சல் மிக்கவர்.அவரை, பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டின் முன்பாகவே மர்ம நபர்கள், கடந்த 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இப்பிரிவினர், நீண்ட விசாரணைக்குப் பிறகு பரசுராம் வக்மோர் உள்பட மொத்தம் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பரசுராம் வாக்மோர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நமது மதத்தை காப்பாற்றுவதற்காக ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என 2017-ஆம் ஆண்டுமே மாதம், ஒரு குழு என்னிடம் வந்தது.

ஆனால், நான் யாரை கொலை செய்யவேண்டும், எதற்காக அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிவிக்கவில்லை; ஆனால், இந்த கொலைக்காக எனக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது; செப்டம்பர் 3-ஆம் தேதி என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருவேறு அறைகளில் தங்க வைத்தார்கள்; செப்டம்பர் 5-ஆம் தேதி மாலையில் என் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, கவுரி லங்கேஷ் வீட்டிற்கு முன்பு என்னைக் கொண்டுபோய் விட்டனர்; கவுரி லங்கேஷ் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்; நான் மெதுவாக இருமினேன்; அப்போது என்னைப் பார்த்து லங்கேஷ் திரும்பினார்; உடனே, அவரை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டேன்.

அன்றிரவே நான் பெங்களூருவை விட்டும் வெளியேறிவிட்டேன்; ஆனால், தற்போது லங்கேஷை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன்’.இவ்வாறு பரசுராம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

ஆனால், இந்த வாக்குமூலத்தில் பரசுராம் முழு உண்மைகளையும் கூறியதாக தெரியவில்லை; குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கவுரி லங்கேஷ் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகிய மூவரும் ஒரே நபரால்தான் கொல்லப்பட்டுள்ளனர்; பயன்படுத்தப் பட்ட துப்பாக்கியும் ஒரே ரகத்தைச் சேர்ந்தது என்று ஏற்கெனவே உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு பார்க்கையில், கவுரி லங்கேஷை மட்டும் கொலை செய்ததாக பரசுராம் கூறுவதில் சந்தேகம் எழுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!