
நடிகை கஸ்தூரியை எதிர்த்து முழக்கமிட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கையர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், சொந்த அரசியல் ஆதாயத்திற்காக திருநங்கைகளை அவதூறாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டு இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தங்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி உடனடியாக அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும் என்றும் கைகளில் துடப்பங்களோடு திருநங்கைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சினேகிதி என்ற அமைப்பைச் சேர்ந்த ரேணுகாதேவி உட்பட 30க்கும் மேற்பட்ட திருநங்கையர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.