"வாட்ஸ் அப்" மெசேஜ்காக முட்டிக்கொள்ளும் கிரண் - நாராயணசாமி..!

First Published Jun 16, 2018, 7:16 PM IST
Highlights
kiranbedi and narayanasami fighting together for whatsapp message


வாட்ஸ் அப் மெசேஜ்காக முட்டிகொள்ளும் கிரண் - நாராயணசாமி..!

புதுவை கவர்னராக உள்ள கிரண்பேடி அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ட்விட்டர் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்து வருகிறார்

வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டர் அரசால் அங்கீகரிக்கப்பட வில்லை. அதனால் இதனை பயன்படுத்தக் கூடாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்து இருந்தார்.

மேலும் வாட்ஸ் ஆப் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் விவரம் கொண்டு அதிகாரிகள் செயல்பட கூடாது எனவும், அவ்வாறு செயல்பட்டால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதால் தவறில்லை என  பதிலடி கொடுத்து உள்ளார் கவர்னர் கிரண் பேடி

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. மேலும் அவசர தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ள வாட்ஸ் ஆப் பேருதவியாக உள்ளது.

மற்ற முறைகளை காட்டிலும் வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டர் தான் மிகவும் எளிதானது. எனவே இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்

கிரண் பேடியும் நாராயணசாமியும் எப்போதுமே எலியும் பூனையுமாக இருப்பார்கள்.

கிரண் பேடி எது சொன்னாலும் நாராயணசாமி அதற்கு எதிராக தான் பேசுவார்.அதே போன்று நாராயணசாமி எது சொன்னாலும் கிரண் பேடி அதற்கு எதிராக தான் செயல்படுவார்

சமீபத்தில் நடந்த கம்பன் விழாவில், ஒரே மேடையில் நாராயணசாமியும் கிரண்பேடியும் கலந்துக்கொண்டனர். அப்போது தான் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழி பெயர்க்க நாராயணசாமியை அழைத்து வம்புக்கு இழுத்தார் கிரண் பேடி.

அதன்பின்னர், முதல்வர் நாராயணசாமியின் பிறந்த நாளுக்காக அவரது வீட்டிற்கு சைக்கிளில் சென்று வாழ்த்து தெரிவித்தார் கிரண் பேடி.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு இருவருக்கும் எப்போதுமே முட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!