
ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பம் கொடுத்துவிட்டது என்று பொன்னையன் பகீர் குற்றச்சாட்டை `வைத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவு இன்னும் மர்மமாகவே இருத நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு செய்தி நம்மை இன்னும் சந்தேகத்தின் உச்சிக்கே செல்ல வைத்துள்ளது. அதுவும் அதிமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் எனஓவ்வொரு நாளும் ஓவொருவரும் சொல்லும் கதைகள் இன்னும் எடிசை உண்டாக்குகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே அரை மயக்கத்தில் இருந்ததாகவும் அவரது சர்க்கரை அளவு 500-க்கும் மேலும், ரத்த அழுத்தம் அதிகரித்தும் காணப்பட்டது. மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 48 சதவீதமாக இருந்ததால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று இருந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தவரை அவருக்கு வெறும் காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என அறிக்கைகள் விட்ட அப்பல்லோ பிறகு ஒவ்வொன்றாக வெளியிட்டது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்னார்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டதகாவும் மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாப்பு கருதியே டிசம்பர் 5ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்தார். அபல்லோ மருத்துவமனையும் இதனை மறுத்தது.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டனர். ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து 8 மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் தான் அவரது சர்க்கரை அளவு 500, 560 என தாறுமாறாக எகிறியுள்ளது.
மேலும் நோய் தொற்றும் அதிகமானது. மெல்ல கொல்லும் ஸ்டீராய்டுகள் விஷத்தைக் கொடுத்தனர். இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், சசிகலா குடும்பத்தினர் வேண்டுமென்றே ஜெயலலிதாவை தீர்த்துக்கட்ட ப்ளான் போட்டு ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர்.
ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டது குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தப் பட வேண்டும். ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறக்கவில்லை டிசம்பர் 4-ஆம் தேதி இறந்துவிட்டார் என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியதன் மூலம் பல பகீர் தரும் உண்மைகள் வெளிவருகின்றன. இவ்வாறு பேசினார்.