
கண்டு பிடித்துவிட்டீர்களா? அதிமுகவில் பரபரப்பாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் வளர்மதியும், கோகுல இந்திராவும் தான் அது. அவர்களுடன் எப்பொழுதுமே பரபரப்பாக கத்தகூடிய அதிமுக செய்தி தொடர்பாளர் மைக் சி.ஆர். சரஸ்வதி.
சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
மூன்று மணி நேரம் காத்திருந்தும் சசிகலாவை சந்திக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பினர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்க்க, இன்று தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் சென்றனர்.
அப்போது செங்கோட்டையன் டிரைவர், சிறை அதிகாரிகளிடம் வந்துள்ளவர்கள் யார் என தெரியுமா? அமைச்சர்கள். அவர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.
ஆனால், சிறையில் அமைச்சரவை கூட்டமா நடக்கப்போகிறது என பதிலளித்த சிறை அதிகாரிகள், அவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். மேலும் டிரைவர் மிரட்டும் தொனியில் பேசுவதாக கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அமைச்சர்கள் மூன்று பேரும் தங்கியிருந்த ஓட்டலுக்கே திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கோகுலா இந்திரா, வளர்மதி மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவை சந்திக்க சிறை வளாகத்திற்கு வந்தனர்.
தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டனர். இதனால் மூன்று பேரும் சோகத்தோடு திரும்பியுள்ளனர்.