அரசின் திட்டங்களை பிரபலப்படுத்தும் அதிகாரிகளுக்கு விருது? - மத்திய அரசு 

 
Published : Feb 21, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
அரசின் திட்டங்களை பிரபலப்படுத்தும் அதிகாரிகளுக்கு விருது? - மத்திய அரசு 

சுருக்கம்

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை பிரபலப்படுத்தும் வகையில் திறம்பட பணியாற்றும் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார்.

5 திட்டங்கள்

இதற்காக மத்திய அரசால் 5 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிரதமரின் வேளாண் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்கேஎஸ்ஒய்), பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிஎம்எப்பிஒய்), தீன தயாள் உபாத்யாய கிராம மின்னொளித் திட்டம், மின்மய தேசிய வேளாண்சந்தை, எழுந்திடு இந்தியா -தொடங்கிடு இந்தியா ஆகியவையே அந்த 5 திட்டங்கள் ஆகும்.

பிரதமர் விருது

இந்த 5 திட்டங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் திறம்பட பணி புரியும் அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியன்று பொது பணியாளர் தினத்தில் (சிவில் சர்வீசஸ் டே) பொது நிர்வாகத்தில் திறம்பட பணியாற்றியதற்கான பிரதமர் விருது அளிக்கப்படவுள்ளது.

முன்னுரிமைத் திட்டம் அடிப்படையில் 15 விருதுகளும், புதியன கண்டுபிடித்தல் அடிப்படையில் 2 விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

2017-ஆம் ஆண்டு பிரதமர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தனி இணையதள முகவரியை மத்தியப் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் குறைதீர்ப்பு துறை தொடங்கியது.

600 மாவட்டங்களில்

கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து இந்த விருதுகளுக்கு 1,515 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் 830 விண்ணப்பங்கள், மத்திய அல்லது மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் உயர்நிலை அதிகாரிகளால் 3 கட்டமாக பரிசீலிக்கப்பட்டு, விருது பெறுவோர் இறுதி செய்யப்படவுள்ளனர்.

மேற்கண்ட தகவல் மத்தியப் பணியாளர் நல அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!