எனக்கே புத்தி சொல்கிறீர்களா? நான் நேர்மையானவன் - அ.ராசாவுக்கு சிபிஐ வக்கீல் கண்டனம் 

First Published Feb 21, 2017, 4:34 PM IST
Highlights


சிபிஐ நீதிமன்றத்தில் வாத பிரதிவாதத்தின் போது சிபிஐ வழக்கறிஞருடன் அ.ராசா கடும் மோதலில் ஈடுபட்டார். எனக்கு புத்தி சொல்ல நீங்கள் யார் நான் நேர்மையான வக்கீல் என்று சிபிஐ வக்கீல் ராசாவுடன் மோதலில் ஈடுபட்டார்,  அவரை நீதிபதி சமாதானப்படுத்தினார். 


2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கின் விசாரணை  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதத்தை சிறப்பு வழக்கறிஞர்  ஆனந்த் குரோவர் முன் வைத்து  வாதம் செய்து வருகிறார்.


நேற்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்  ஆனந்த் குரோவர் ஆஜராகி, "அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை.

அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி ஆராயாமல் தன்னிச்சையாக ராசா எடுத்த நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று பேசினார்.


 "யூனிடெக்' நிறுவனத்துக்கு சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டு அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்' என்று பேசினார்.


வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா, ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகுதான் அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள் வாதிடலாம்.

ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத் தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்' என்று அ.ராசா கோபமாக கூறியுள்ளார்.


இதனால் கோபமடைந்த சிபிஐ வக்கீல் ஆனந்த் குரோவர் , "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா? நான் ஒரு நேர்மையான வழக்கறிஞர்  என்று கோபமாக கூறினார். இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக  இருக்கலாம். நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர் தொழிலை செய்து வந்தவன் தான் .


 அதற்காக எனக்கு எதிராக நீங்கள் கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை "சரி' என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியாது என்றார். 


இதனால் கோபமடைந்த சிபிஐ வழக்கறிஞர்  ஆனந்து குரோவர் "எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார். இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு அ.ராசாவுக்கு வாய்ப்பு வரும் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்தார்.
 

click me!