
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்று அதே ஸ்டைலில் தனது அறையில் அமைச்சர்கள் கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழக முதலமைச்சராக கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக இருந்தனர். தங்கள் அமைச்சர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்.
அமைச்சரவைக் கூட்டங்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் நடத்தினர். அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் பொம்மைகளாக நடத்தப்பட்டனர்.
அதன்பின்னர், முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் தனது துறை அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்களை முறையாக ‘conference hall’ ல் நடத்தினார்.
இன்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். அப்போது, மீண்டும் பழைய பாணியில், ஜெயலலிதா போன்று தனது அறையில் அமைச்சர்களை அழைத்து அமரவைத்து கூட்டத்தை நடத்தினார்.
ஜெயலலிதா இருந்தபோது தான் பக்கவாட்டில் உட்கார்ந்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டோம். ஓ.பி.எஸ் முதல்வரான பின்னர், கவுரமாக ‘conference hall’- ல் கூட்டம் நடந்தது.
ஆனால் தற்போது, மீண்டும் பழைய பாணியில் பக்கவாட்டில் அமர வைக்கின்றார்களே என்று அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.