திருப்பதி கோயிலுக்கு ரூ.5. கோடியில் தங்க கிரீடம், நகைகள் - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காணிக்கை

 
Published : Feb 21, 2017, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
திருப்பதி கோயிலுக்கு ரூ.5. கோடியில் தங்க கிரீடம், நகைகள் - தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காணிக்கை

சுருக்கம்

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு ரூ. 5.6 கோடி மதிப்பில் தங்க கிரீடம், நகைகள் உள்ளிட்டவற்றை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நாளை(புதன்கிழமை) காணிக்கையாக வழங்க உள்ளார்.

தெலங்கானா முதல்வராக பதவி ஏற்றபின், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த காணிக்கையை திருப்பதி பாலாஜி கோயிலுக்கு இந்த காணிக்கையை முதல்வர்சந்திரசேகர் ராவ் செலுத்த உள்ளார்.

மேலும், முதல்வராக பதவி ஏற்று முதல்முறையாக திருப்பதி கோயிலுக்கு சந்திரசேகர் ராவ் வருகை தர உள்ளார்.

தனி விமானம் மூலம் முதல்வர் சந்திரசேகர் ராவ், அவரின் குடும்பத்தினர், அமைச்சர்கள் ஆகியோர் நேற்று மாலை ரேனுகுண்டா விமானநிலையம் வந்தனர்.

அங்கிருந்து திருப்பதி செல்ல உள்ளனர். தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபின்,  திருப்பதிக்கு முதல்முறையாக முதல்வர் சந்திரசேகர் ராவ் வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

மேலும், முதலில் பத்மாவதி தாயார் கோயிலுக்கும் அதன்பின் வெங்கடேஸ்வராகோயிலுக்கும் முதல்வர் சந்திரசேகர் ராவ் செல்ல உள்ளார்.

இது குறித்து தெலங்கான அரசின் முன்னாள் ஆலோசகரும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி.சி. ராமனாச்சாரி கூறுகையில், “ தெலங்கானாமாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது,

முதல்வராக பதவி ஏற்றது ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக முதல்வர் சந்திரசேகர் ராவ் பயணம் அமைந்துள்ளது. இதில் திருப்பதி கோயிலுக்கு ரூ.5.6 கோடி மதிப்பில் தங்க கிரீடம், நகைகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக அளிக்க உள்ளார் '' எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த வார இறுதியில் குரவியில் உள்ள வீரபத்ர சாமி கோயிலுக்கு தங்க மீசை காணிக்கையாக சந்திரசேகர் ராவ் அளிக்க உள்ளார்

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன், வாரங்கல் நகரில் உள்ள பத்திரகாளி கோயிலுக்கு ரூ.3.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளை காணிக்கையாகவும்,  

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு அம்மனுக்கு தங்கமூக்குத்தியும்  முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு