
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தேர்வு செல்லாது என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் அளித்த புகாரின் பேரில் அவர் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதற்கு இன்று சசிகலா பதிலளித்தார் .
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக பதவி ஏற்கும்படி கட்சியினர் கேட்டுகொண்டார்கள். ஆனால் அதற்கு கட்சிதொண்டர்கள் பொதுமக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் அதையும் மீறி பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராகவும் சில சட்டசிக்கல்கள் உள்ளன அது பின்னர் களையப்பட்டு முறையாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினர்.
அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளில் கட்சி இரண்டாக பிரிய அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ் அணி பக்கம் தாவ அவரை கட்சியைவிட்டு நீக்கிய சசிகலா செங்கோட்டையனை அவைத்தலைவராக நியமித்தார்.
ஆனால் தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை என்று சசிகலா முதல் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார் மதுசூதனன். பின்னர் சசிகலா தேர்வு செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதற்கு பிப்.28 க்குள் விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் இன்று விளக்கம் அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிமுக சட்ட திட்டத்தின் படி பொதுச்செயலாளராக வருபவர் 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் , கட்சியின் உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும் , அல்லது போட்டியின்றி தேர்வு செய்யப்படவேண்டும்.
இடைக்கால பொதுச்செயலாளர் என்ற ஏற்பாடு கட்சியில் இல்லை. பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அப்படி அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை அவைத்தலைவர் கட்சியை வழி நடத்த வேண்டும் என்பது விதி என்று மதுசூதனன் தரப்பில் வாதமாக வைக்கப்படுகிறது.
இதனால் சசிகலா தரப்பு என்ன பதிலளிக்க போகிறது என்பது முக்கியமான கேள்வி , இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடைமுறை குறித்து டிடிவி தினகரன் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கட்சியின் பக்கம் விசுவாசமாக இருக்க வேண்டும்.
ஒரு வேலை பொதுச்செயலாளர் தேர்தல் வந்தால் கட்சி உறுப்பினர்கள் வாக்கை பெற இப்போதே பணிகளை துவக்க வேண்டும் என்பது உட்பட பேசி அதன் முடிவுகள் சசிகலா தரப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
பின்னர் தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா சார்பில் பதிலை , துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது வழக்கறிஞர் செந்தில் மூலம் சமர்ப்பித்தார். இதன் பின்னர்தேர்தல் ஆணையம் இது பற்றி முடிவெடுக்கும்.