
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பி.எஸ் – சசிகலா என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதிமுகவில் தாற்காலிகப் பொது செயலாளர் நியமனத்துக்கு கட்சி விதிகளில் இடமில்லை என கூறி, ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் எம்பி. கே.சி.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கை, எதற்காக பொது நலன் மனுவாக தாக்கல் செய்தீர்கள். கட்சி விவகாரம் குறித்த சாரம்சம் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளது. பொது பிரச்சனை எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று கொண்ட கே.சி.பழனிச்சாமி, தனது வழக்கின் மனுவை வாபஸ் பெற்றார்.