எனது கணவர்  எங்கே சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு - காலையில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தரவு 

First Published Dec 29, 2016, 2:08 AM IST
Highlights


தனது கணவர் எங்கே இருக்கிறார் என கேட்டு அவரை நீதிமன்றத்தில் தனது கணவரை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது கணவரை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சூழ மனுத்தாக்கல் செய்ய கட்சி அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த அவரை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சூழ்ந்து தாக்க முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து காக்க முயன்றனர். இதில் லிங்கேஸ்வர திலகருக்கு சராமாரியாக அடி விழுந்தது.  பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். 

அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி  144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்தனர்.

தனது கணவர் தாஅக்கப்பட்டது குறித்து அவர் எங்கே இருக்கிறார் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகம் வரை கேட்டும் பதில் இல்லை என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா இது பற்றி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இன்று காலை சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகத்தை ஆஜர்படுத்த வேண்டும், இல்லையேல் அவரது நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது..
 

click me!