எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு..!

Published : Feb 04, 2021, 05:15 PM ISTUpdated : Aug 06, 2021, 03:44 PM IST
எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு..!

சுருக்கம்

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூரில் தங்கி இருக்கிறார். அவர் வரும் 7ம் தேதி தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் தற்போது 8ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்கள்.   

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூரில் தங்கி இருக்கிறார். அவர் வரும் 7ம் தேதி தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் தற்போது 8ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேற்று இரவு சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே மாட்டோம் என்பது திட்டவட்டமான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில்தான் அதிமுகவின் அதிமுக முக்கியத் தலைவரான எடப்பாடி பழனிசாமியை சசிகலா குடும்பத்தின் வாரிசு சென்னையில் நேற்று இரவு சந்தித்து சிலபல விஷயங்களை பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த சந்திப்பு சமாதான முயற்சியா? ஏதேனும் கோரிக்கைக்கான சமிக்ஞையா என விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சந்திப்பை அடுத்தே சசிகலா 8ம் தேதி தமிழகம் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!