சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்.. முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 4:45 PM IST
Highlights

சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்ச ரூபாயை  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 75 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கினார். 2019ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் வழங்கினார்.  

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இயக்குனர் தங்கராஜிடம் தலைமைச்செயலகத்தில் அதற்கான தொகையை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார். 

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்ச ரூபாயும், 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்ச ரூபாயை  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 75 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கினார். 2019ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் வழங்கினார். 

அந்த வகையில் தற்போது சென்னையில் வரும் 18-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இதனை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இயக்குனருமான தங்கராஜியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர்.
 

click me!