ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்... அதிமுக எம்.எல்.ஏ., வலியுறுத்தல்..!

Published : Feb 04, 2021, 04:04 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்... அதிமுக எம்.எல்.ஏ., வலியுறுத்தல்..!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம், திமுக அரசால் காவு கொடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போரட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

அந்த வழக்குகள் அனைத்தையும் கனிவுடன் பரிசீலனை செய்து தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..
பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!