இந்தியாவின் ரஃபேலுக்கு முன்னால் அலறியடித்து ஓடிய சீன பைட்டர் ஜெட்.. விமானப்படை தளபதி பதாரியா பெருமிதம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 3:32 PM IST
Highlights

 கிழக்கு லடாக்கில் சீனா தனது ஜே-20 போர் விமானத்தை லடாக்கிற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு கொண்டு வந்தது. ஆனால் நாங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ரஃபேல் ஃபைட்டர்  ஜெட்டை அப்பகுதிக்கு கொண்டு சென்றோம், 

இந்தியாவின்  ரஃபேல் பைட்டர் ஜெட் விமானம் சீனாவின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என இந்திய விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ்  பதாரியா கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஓராண்டு காலமாக எல்லை பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. பரம எதிரியான பாகிஸ்தான் இப்போது சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு கூடுதலாக இந்தியாவை எதிர்த்து வருகிறது. ஒருவேளை போர் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில்  படைகளை பாதுகாப்பு துறை பலப்படுத்தி வருகிறது. 

இதற்காக அதிநவீன போர்க் கருவிகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிவேகமாக இறக்குமதி செய்வதுடன், உள்நாட்டிலேயே அவைகளை உற்பத்தி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதத் தடுப்பு அமைப்பை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. அதேபோல் எந்தச் சூழ்நிலையிலும் எதிரிநாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும், பிரான்ஸ் நாட்டு ரஃபேல் பைட்டர் ஜெட் விமானங்களை, இந்தியா 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  இறக்குமதி செய்து வருகிறது. பல்வேறு வழிகளில் படைபலத்தை இந்தியா வலுப்படுத்தி வரும் நிலையில்,  நாட்டின் முதன்மையான விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 13 ஆவது பதிப்பு பெங்களூரில் தொடங்கியுள்ளது. அதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிநவீன போர் கருவிகள், விமானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாதுகாப்புத்துறையின் பொது நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதில் இடம்பெற்றன. 

இக்கண்காட்சியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்துள்ளார், அதில் முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ் பதாரியா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  இந்திய எல்லையில் போதுமான அளவிற்கு பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர், தற்போதைக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த உரையாடல் எப்படி செல்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம். விமானப்படை எல்லை விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனா தனது படைகளை பின்வாங்கினாள் அது இரு  தரப்பிற்கும் நலமானதாக இருக்கும். ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. 

 

 

ஒரு அசாதாரண சூழல் ஏற்படும் பட்சத்தில் அதை முழுமையாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், கிழக்கு லடாக்கில் சீனா தனது ஜே-20 போர் விமானத்தை லடாக்கிற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு கொண்டு வந்தது. ஆனால் நாங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ரஃபேல் ஃபைட்டர்  ஜெட்டை அப்பகுதிக்கு கொண்டு சென்றோம், அதைப் பார்த்த சீனா உடனே தனது ஜே-20 போர் விமானத்தை அங்கிருந்து திருப்பிச் சென்றது, ரபேல் போர் விமானத்தால் சீனா பெருமளவில் கலக்கம் அடைந்துள்ளது. ரஃபேல் போர் விமானத்தின் செயல்பாடுகளும் அதன் திறமைகளும் அவர்கள் நன்கு தெரியும். மொத்த பட்ஜெட்டில் சுமார்  20,000 கோடி அதிகரிக் கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி கிடைத்தது, இது முப்படைகளுக்கு உதவியாக இருந்தது எங்கள் திறனை வளர்க்க இது போதுமானது என நினைக்கிறேன். இவர் அவர் கூறினார்.
 

click me!