போயஸ் கார்டனில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கு எதிரே சுமார் 10 கிரெளண்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பங்களாவில் ஜெயலலிதா பிறந்தநாளான நாளை மறுதினம் சசிகலா குடியேறவுள்ளார். இதற்காக அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தனக்கு நெருக்கமான ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 30 வருடங்களுக்கு மேல் சென்னை போயஸ் தொட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவுடன் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அரசியல் மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்ற சில மாதங்களில் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ். அடுத்த ஒரு சில வாரங்களிலையே சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்து விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.
இதனையடுத்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிவிட்டு ஓபிஎஸ் உடன் எடப்பாடி பழனிசாமி இணைந்தார். இதனால் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இதனால் சசிகலா போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கால கட்டத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு எதிராக மிக பிரம்மாண்டமாக 10 கிரெளண்டில் சசிகலா பங்களா கட்டினார். இந்த பங்களா மீது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்து விட்டு. தண்டனை தொகையையும் சசிகலா தரப்பு கட்டியது. இதனையடுத்து பங்களா கட்டுமானப்பணி விரைவாக நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி புதிய வீட்டில் சசிகலா கோ பூஜை நடத்தி கிரகப்பிரவேசம் நடத்தினார்.
புதிய இல்லத்தில் குடியேறும் சசிகலா
தற்போது தியாகராயநகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வரும் சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி போயஸ் இல்லத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டில் குடியேறவுள்ளார். புதிய இல்லம் குடியேறும் நிகழ்ச்சிக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாதகவும், மேலும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் உறவினர்கள் என சுமார் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா தேதி அறிவிப்பு.! எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்