
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி மரணமடைந்த பின்னர் அவரது நினைவிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர் . அதன் பின்னர் அவர்கள் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வீட்டுக்கு வருகின்றனர்.
ஆயிரமாயிரமாய் படையெடுக்கும் தொண்டர்கள் பொதுமக்களுக்காக போயஸ் தோட்ட இல்லம் திறக்கப்பட்டுள்ளது. தினமும் வரும் பொதுமக்கள் முதல்வரின் வீட்டை பக்தியுடன் பார்த்து செல்கின்ற்னர்.
தற்போது போய்ஸ் இல்லாத்தில் சசிகலா , இளவரசி மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது அரசியல் பிரவேசத்துக்கான அடியை மெல்ல மெல்ல சசிகலா எடுத்து வைத்து வருகிறார். ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்த சசிகலா ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெளியே வந்தார்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழுவதும் சசிகலா இருந்தார். பின்னர் நேற்று முதல்வர் ,அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அங்கு ஜெயலலிதா சமாதிக்கு பூத்தூவி கண்ணீர் விட்டு அழுதார்.
இன்று காலை போயஸ் கார்டனில் ஜெயலலிதா படத்தை திறந்து மலர்தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா பின்னர் அங்கு வந்த தொண்டர்களை பெண்களை சந்தித்தார். அப்போது கண்ணீர் விட்ட தாய்மார்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.