செயல் தலைவர் ஆவாரா ஸ்டாலின்? - டிச-20ல் திமுக பொதுக்குழு

 
Published : Dec 10, 2016, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
செயல் தலைவர் ஆவாரா ஸ்டாலின்? -  டிச-20ல் திமுக பொதுக்குழு

சுருக்கம்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார்.

அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் திமுகவின் ஆக்கபூர்வமான பணிகள் குறித்து தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருதும் நிலையில் திமுக அறிவித்துள்ள இந்த பொதுக்குழு கூட்டம் மிகுந்த ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலையில் அக்கட்சியின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இக்கூட்டத்தில் நியமிக்கப்படலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பான தகவல் நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!