ஓபிஎஸ் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் - மறைந்த முதல்வர் ஜெவுக்கு இரங்கல்

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
ஓபிஎஸ் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் - மறைந்த முதல்வர் ஜெவுக்கு இரங்கல்

சுருக்கம்

முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கபட்டார்.

அவரது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது.

முன்னதாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு சசிகலா,  ஓபிஎஸ்,மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு சென்று ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர் .

பின்னர் அனைவரும் தலைமை செயலகத்தில் கீழ்தளத்தில் உள்ள கூட்டரங்கில் கூடினர்.

இதனை தொடர்ந்து அங்கு ஜெ.மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது .

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்,ஜல்லிக்கட்டு,காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?