ஹலோ.. நான் ரஜினி பேசுகிறேன்.. சசிகலா உடல்நிலையை விசாரித்த சூப்பர் சூப்பர் ஸ்டார்.. அதிரும் தமிழக அரசியல் களம்

By vinoth kumarFirst Published Feb 9, 2021, 9:13 AM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் விசாரித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் விசாரித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பெங்களூருவில் உள்ள இல்லத்தில் ஒரு வார காலம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 7.45 மணிக்கு சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இரு மாநில எல்லையான ஜூஜூவாடி வழியே தொண்டர்களின் வரவேற்புக்கிடையே சசிகலா தமிழகத்தை அடைந்தார். பின்னர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரம்மாண்டமாக வழிநெடுக மேளதாளங்கள் முழங்க, பூத்தூவி சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சசிகலா சென்னை வந்தடைந்தார். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்;- ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர்செல் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. 

சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று என்னிடம் போனில் விசாரித்தார் என டிடிவி. தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன்.

மேலும், ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சின்னம்மாவுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றும் டிடிவி. தினகரன்  தெரிவித்துள்ளார். 

click me!