ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

Published : Feb 08, 2021, 10:24 PM IST
ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

சுருக்கம்

ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.  

ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான பலனை விவசாயிகள் அனுபவிக்கவுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!