சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கார் கொடுத்த நிர்வாகி நீக்கம்... தூக்கியடித்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்..!

Published : Feb 08, 2021, 09:41 PM ISTUpdated : Feb 08, 2021, 09:42 PM IST
சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கார் கொடுத்த நிர்வாகி நீக்கம்... தூக்கியடித்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்..!

சுருக்கம்

கிருஷ்ணகிரியில் சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் காரை கொடுத்து உதவிய கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சூளகிரி அதிமுக நிர்வாகியை கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கியுள்ளனர்.   

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு புறப்பட்டார். தமிழக எல்லையான கிருஷ்ணகிரிக்கு கார் வந்தபோது, மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கினார். இதனால், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன், போலீஸ் அதிகாரிகளுடன் வாதிட்டார். ஆனாலும், அதிமுக கொடியுடன் தமிழகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று போலீஸார் உறுதியாகக் கூறினர்.

 
இதனால் சசிகலா உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அதிமுக ஒன்றியச் செயலாளரும் தொழிலதிபருமான சம்பங்கி அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா பயணத்தைத் தொடர்ந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “அதிமுகவில் சிலீப்பர் செல்கள் இல்லை; எட்டப்பன்கள் சிலர் உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூளகிரி ஒன்றிய செயலாளர் சம்பங்கியை கட்சியை விட்டு நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?