
தினகரனை கட்சியை விட்டு வெளியேற்றுவதாக அமைச்சர்கள் அறிவித்த பின்னர், சசிகலாவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதற்காக பெங்களூரு சென்றார் தினகரன்.
ஆனால், தினகரன் மீதுள்ள கோபத்தால், டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும், சந்திக்க விரும்பாததால், சசிகலாவை பார்க்காமலே, பெங்களுருவில் இருந்து திரும்பினார் தினகரன்.
அதனால், இளவரசி மகன் விவேக்கிடம் நான் சின்னம்மாவை பார்க்க வருகிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். ஆனால் அவரோ, உஷாராக, நாம் அவரிடம் கேட்டு சொல்கிறேன். அதன் பிறகு வந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு சசிகலாவை சந்தித்து, தினகரன் சந்திக்கும் விஷயத்தை சொல்லி இருக்கிறார் விவேக்.
அதற்கு, நான் சொன்னது எதையும் காதில் வாங்காமல் இஷ்டத்திற்கு நடந்து, இப்போது எந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டான். எத்தனையோ தடவை சொல்லி அனுப்பியும், என்னை வந்து சந்திக்காமலே இருந்தான்.
இப்போது எல்லாமே முடிந்து விட்டது. இப்போது என்னை வந்து பார்த்து என்ன ஆகப்போகிறது. மேலும், சிறையில் இருந்து கொண்டு நான் சொன்னதை அவனே கேட்காத பொது, மற்றவர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே, இப்போது அவன் இங்கு வரவேண்டாம். தேவையானபோது, நானே சொல்லி அனுப்புகிறேன். அப்போது வந்தால் போதும்.
அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சொல் என்று விவேக்கிடம் சொல்லி இருக்கிறார் சசிகலா.
அதை அறிந்த தினகரன், சசிகலாவை சந்திக்க முடியாததால் டென்ஷனாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.