
விரைவில் நல்லதே நடக்கும் என்று மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அணிக்கும், பன்னீர் டீமும் இடையேயான பேச்சுவார்த்தை கே.பி.முனுசாமியின் அதிரிபுதிரி பேட்டிகளால் அஸ்தமானதாகவே கருதப்பட்டது. ஆனால் இரு அணிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த அண்டர்கிரவுண்ட் ஆப்ரேசன் தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எங்களுக்கு ஆடலும் பாடலும் போட்டோ ஆகனும் என்று சிவகார்த்திகேயன் அடம்பிடித்ததைப் போல முதல் அமைச்சர் பதவியையும், பொதுச்செயலாளர் பதவியை அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு போலாம் என்று ஸ்டிரிக்ட்டாகவே பன்னீர் டீம் சொல்லிவிட்டதாம்.
மடியில கைவைப்பதை எப்படி ஏத்துக்க முடியும் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறதாம் எடப்பாடி அணி. சரி கவலைப்படாதீங்க அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நகர்த்துவோம்.பிறகு எல்லாத்தையும் பார்த்துக்குவோம் என்று பன்னீர் டீமில் இருந்து தூதுவராக செயல்படுகிறாராம் தம்பிதுரை.
இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும் போது கூட விரைவில் நல்லது நடக்கும், அடிமட்ட அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேற்றப்படும் என்று நாம் மேலே சொன்னதை சூசகமாக இரண்டு வரிகளில் சொல்லியுள்ளார்