ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா? 24-ம் தேதிக்குப் பிறகு இபிஎஸ் தரப்பு தெறிச்சு ஓடப்போறாங்க! அலறவிடும் வைத்திலிங்கம்.!

By vinoth kumar  |  First Published Apr 19, 2023, 6:51 AM IST

வரும் 24ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு  வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், ஐயப்பன் உள்ளிட்டோர் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து மனு கொடுத்தனர். 


சசிகலாவை திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு தகுந்த நேரத்தில் அதற்கான பதில் அளிக்கப்படும் என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

வரும் 24ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு  வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், ஐயப்பன் உள்ளிட்டோர் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து மனு கொடுத்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியா.? தேர்தல் ஆணையத்தில் புதிய மனு கொடுத்து செக் வைத்த ஓபிஎஸ்

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம்;- புரட்சிதலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் மற்றும் அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு முன்னிட்டு அதிமுகவின் முப்பெரும் விழா திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கான பேர் பங்கேற்க இருக்கிறார்கள். மாநாட்டில் வரும் தொண்டர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் டிஜிபியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். 

இதையும் படிங்க;- எங்களை டச் பண்ணுவது.. நெருப்போடு விளையாடுவதற்கு சமம்.. அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்..!

கடந்த சில நாட்களுக்கு முன் எங்கள் தரப்பில் 4 பேர் தான் இருக்கிறார்கள் என்று ஜெயக்குமார் பேசினார். இப்போது நாங்கள் மாநாடு அறிவித்ததும் அவர்களும் 4 மாதங்களுக்கு பிறகு மாநாடு நடத்தப்போவதாக சொல்கிறார்கள். 24ம் பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னமாவார்கள். கூட்டணி கட்சி சார்பில் யாரும் மாநாட்டிற்கு அழைக்கவில்லை. சசிகலாவை திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு தகுந்த நேரத்தில் அதற்கான பதில் அளிக்கப்படும் என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

click me!