
அண்ணாமலை சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆருத்ரா ஊழல் என சொல்கிறார்கள். அண்ணாமலை எந்த அரசு பதவியிலும் இல்லை அவரை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றனர். மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக தெரிவிக்கின்றனர். போடட்டும் அவர்கள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் பாஜகவின் லஞ்ச ஊழல் ஒழிப்பு அரசியலை அண்ணாமலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார்.
இதையும் படிங்க:
சிபிஐயில் அவர் புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றத்திலும் ஊழலை அம்பலப்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு முழு ஆதரவை இந்து மக்கள் கட்சி சார்பில் தெரிவிப்போம். தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சியினர் செய்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
மக்களை காப்பதற்கான லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான ஒரு யுத்தம் அதிமுக திமுக என வித்தியாசம் கிடையாது. மேலும் கனிமொழி 800 கோடி உதயநிதி 2000 கோடி சொத்து உள்ளதாக அண்ணாமலை கூறியது குறைவு என அனைவரும் கூறுகின்றனர். அண்ணாமலை சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்து மக்கள் கட்சி அவருக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.