சசி “ஜெயிலிலிருந்து”....தினகரன் ஆதரவாளர்கள் “குடகிலிருந்து”...பெங்களூரில் "முக்கூடல்"..!

 
Published : Oct 06, 2017, 01:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
சசி “ஜெயிலிலிருந்து”....தினகரன் ஆதரவாளர்கள் “குடகிலிருந்து”...பெங்களூரில் "முக்கூடல்"..!

சுருக்கம்

SASIKALA AND TTV SUPPORTERS REACHED BANGALORE TO INVITE SASIKALA

சசி “ஜெயிலிலிருந்து”....தினகரன் ஆதரவாளர்கள் “குடகிலிருந்து”....

ஆஹா என்ன ஒரு பொருத்தம்....தமிழக அரசியலில் இன்றைய நாள்  உண்மையில் மிக முக்கியமானதாக தான் கருத வேண்டும்...

1. காரணம் 4  ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, மருத்துவமனையில் உள்ள அவரது கணவர் நடராஜனை காண இன்று 5  நாள் பரோலில் வெளிவந்துள்ளார்.

2.இரண்டாவதாக தமிழக புதிய ஆளுநராக பதவியேற்றார்  பன்வாரிலால் புரோகித்.அதாவது, இன்று முதல் அவருக்கு தலைவலி தொடங்கும் என்பதை நாமே புரிந்துகொள்ளலாம்

3.  குடகில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு  எம்எல்ஏக்கள்,பரோலில்வெளிவரும் சசிகலாவை வரவேற்பதற்காக  பெங்களூரு வந்துள்ளனர்.இதெல்லாம் சரி பெங்களூரு வந்த தினகரன் ஆதரவாளர்கள் தமிழக எல்லையில் கால் பதிப்பார்களா என்ற ஆவல்  எழுந்துள்ளது

காரணம் சசிகலாவாவது பரோலில் வெளிவருகிறார் என்பது நாடறிந்த உண்மை....ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள், தினகரன் சொன்னால் தானே வெளிவர முடியும்....

ஆக மொத்தத்தில், பெங்களூருவில் கூடியது ......

@ இளவரசி மகன் விவேக், அவரது மனைவி கீர்த்தனா, ராஜராஜன் ஆகியோரும் சசிகலாவுடன் சந்திப்பு

@ பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு  

@ குடகிலிருந்து வெளிவந்த தினகரன் ஆதரவாளர்களும் சசிகலாவை  சந்திப்பு.....

       ஆக மொத்தத்தில் EPS OPS  இவர்கள் இருவரும் கட்சியை  விட்டு எவரையெல்லாம் ஒதுக்கினார்களோ அவர்கள் அனைவரும், சசிகலாவிற்கு கொடுத்த பரோல் மூலம் ஒன்றாக சந்தித்து உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது

 

 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..