"சசிகாவுக்கு 5 நாட்கள் மட்டும்தான் பரோலா" வருத்தமளிக்கிறது என்கிறார் நாஞ்சில் சம்பத்!

 
Published : Oct 06, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
"சசிகாவுக்கு 5 நாட்கள் மட்டும்தான் பரோலா" வருத்தமளிக்கிறது என்கிறார் நாஞ்சில் சம்பத்!

சுருக்கம்

Only 5 days for Sasikka parol says Nanjil Sampath

சசிகலாவுக்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தார். அவரின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் உள்ள குளோபால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

சிகிச்சை பெற்று வரும் கணவரை பார்ப்பதற்காக, சசிகலா இரண்டாவது முறையாக பரோல் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பரப்பரன அக்ரஹார சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் சிறையை விட்டு வெளியே வரும் சசிகலா விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை வருகிறார்.

சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில் அவருக்கு சிறை நிர்வாகம் 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்துள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசிகலாவுக்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்திருப்பது வருத்தமளிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..