
அது “ORANGE” இல்லை “RED”..! “RED-னா டேன்ஜர்”..! அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!
தமிழகத்தையே கதி கலங்க வைத்திருக்கும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,அதனை கட்டுப்படுத்தவும் சுகாதராத் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார் கூறியது...
தமிழகத்தில் சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் எங்களுடன் சேர்க்கபடாது எனவும்,கட்சியை பொறுத்தவரை அவர்களை எப்பொழுதோ ஒதுக்கி வைத்தது வைத்தது தான்...இதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.,
சசிகலாவின் கணவர் நடராஜ் உடல்நிலை மோசமாக உள்ளதாக பரோலில் வெளிவர உள்ள சசிகலாவின் வருகையால் ஏதாவது மீண்டும் குளறுபடி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில், பரோலில் வெளிவருவதற்கு முன்பாகவே அமைச்சர் ஜெயகுமார் இது போன்று தெரிவித்துள்ளார்
அது “ORANGE” இல்லை “RED”..!
டெங்கு குறித்த விழிப்புணர்வு பதாகையில் பச்சைக்கு பதிலாக காவி கலர் உள்ளதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு...
“நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டு மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறீர்கள்...கொசுவினால் டெங்கு வருகிறது..இந்த டெங்குவால் பெரிய ஆபத்து நடந்து வருகிறது...இதனை குறிக்கும் வகையில் ரெட் கலரில் தான் பதாகை வைக்கப்பட்டுள்ளதே தவிர.....நீங்கள் நினைப்பது போல் அது காவி கலர் அல்ல என விளக்கம் கொடுத்தார் அமைச்சர்....
நாடே காவி காவினு சொல்லி வந்தாலும், அமைச்சர் சொன்ன விளக்கத்தில் ஒரு லாஜிக் இருக்கத்தான் செய்கிறது