திமுகவுக்கு எதிராக சசிகலா எடுத்த அதிரடி முடிவு... முஸ்லீம் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2021, 10:53 AM IST
Highlights

முஸ்லீம்களின் பேராதரவை பெற்றிருக்கும் மமகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் ஹைதர் அலியை சசிகலா சந்திக்க இருப்பது அரசியல் களத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் பல திருப்பங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பிரதான கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்த்த கட்சிகளெல்லாம் கூட்டணியை விட்டு நழுவிக் கொண்டிருக்கின்றன. இத்தைகைய பரபரப்பான சூழலில், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

மமகவின் முக்கிய அங்கமான தமமுக, இந்த தொகுதி பங்கீடு முறையை ஆதரிக்க மறுக்கிறது. முஸ்லீம்களின் பேராதரவை பெற்றிருக்கும் மமகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஹைதர் அலியை சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

முஸ்லீம்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க திமுக முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே பேச்சுவார்த்தையில் அக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சசிகலா ஹைதர் அலியை சந்திப்பது முஸ்லீம் வாக்குகளை சிதறடிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. சசிகலாவை தொடர்ந்து ஹைதர் அலி டிடிவி தினகரனையும் சந்தித்து பேச இருக்கிறார். 

click me!