அப்பாடா... நிம்மதி பெரு மூச்சுவிட்ட செல்வகணபதி.! எதிப்புக்கு மத்தியில் வேட்பு மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம்

By Ajmal KhanFirst Published Mar 28, 2024, 3:03 PM IST
Highlights

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு மீதான பரிசீலனையின போது திமுக வேட்பாளர் TM செல்வகணபதி வேட்புமனு வை நிராகரிக்க கோரி சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததையடுத்து வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இற்கான விளக்கத்தை செல்வகணபதி கொடுத்ததையடுத்து வேட்புமனு ஏற்க்கப்பட்டது

வேட்புமனு பரிசீலனையில் சிக்கல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நேற்றோடு நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது வட சென்னை, சேலம், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நடைபெற்ற பரிசீலனையில் வடசென்னை, நீலகிரி தொகுதி வேட்பாளர்களின் மனு ஏற்க்கப்பட்டது. ஆனால் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை ஏற்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் பாட்டீல்  தலைமையில் பரிசீலனை நடைபெற்றது.

வேட்புமனுவில் குளறுபடி.?

அப்போது  மொத்தம் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீது பரிசீலனை தொடர்ந்தது. அப்போது,  சுயேட்சை வேட்பாளர் ராஜா என்பவர் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வீட்டு முன் தாக்களில் பல்வேறு தகவல்கள் விடுபட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக செல்வகணபதி, தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் கலர் டிவி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டதை அவர் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் சேலம் மக்களவைத் தொகுதிக்குள் இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பதையும் ஆட்சேபனையாக தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு ஏற்பு

இதனை காரணமாக செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு மற்றும் சுயேட்சை வேட்பளார்களின் வேட்புமனு பிரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக செல்வகணபதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது அப்போது தேர்தல் அதிகாரியிடம் செல்வகணபதி வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். இதனை ஏற்றுகொண்ட தேர்தல் அதிகாரி செல்வகணபதி வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து செல்வகணபதி மற்றும் திமுகவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். 

இதையும் படியுங்கள்

Thirumavalavan : திருமாவளவன் வேட்புமனு ஏற்பு.! அதிமுக முன்னாள் எம்பி மனு நிராகரிப்பு- தேர்தல் அதிகாரி அதிரடி

click me!