ஆ.ராசாவிற்கு செக் வைத்த பாஜக.. வேட்புமனு திடீர் நிறுத்தி வைப்பு-பரிசீலனைக்கு பின் மனுவை ஏற்ற தேர்தல் அதிகாரி

By Ajmal Khan  |  First Published Mar 28, 2024, 12:46 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஆ.ராசாவின் வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாக தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் முறையிட்டதையடுத்து ஆ.ராசா வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது


வேட்புமனு பரிசீலனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதனையடுத்து தமிழகத் முழுவதும் 39 தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆகியோரின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியநிலையில், திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சியாக நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவின் வேட்புமனு பரிசீலனையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

Tap to resize

Latest Videos

ஆ.ராசா வேட்புமனு ஏற்பு

நீலகிரி தொகுதியில் 33 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது பாஜகவின் எல்.முருகன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் திமுக வேட்பாளர் லோகேஷ் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் மனுவில் குளறுபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து  அந்த வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து வேட்புமனு மீது விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்றக்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்

திமுக சேலம் வேட்பாளர் செல்வகணபதி போட்டியிடுவதில் சிக்கல்..! வேட்புமனுவை நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி

 

click me!