கரூரில் என்ன நடக்கும் என பயந்து அண்ணாமலை கோவைக்கு சென்றாரோ அதே தான் அங்கும் நடக்கும் என தெரிவித்த ஜோதிமணி, தமிழ்நாட்டில் மக்கள் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தோல்வி பயத்தில் அண்ணாமலை ஓடிவிட்டார்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வீதி, வீதியாக சென்று வேட்பாளர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவை பொருட்டாக ஏன் நினைக்கவேண்டும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்,
undefined
பாஜக மற்றும் மோடி ஆட்சி ஆகா.! ஓகோவென இருக்கிறது, தமிழ்நாடு மக்களுக்கு, கரூர் மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் சொந்த தொகுதியில் அண்ணாமலை நிற்க வேண்டியது தானே, இங்கு தான் அரவங்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டார். எதற்கு கோவைக்கு அண்ணாமலை ஓடுகிறார். கரூரில் வெல்ல முடியாது என அவருக்கே தெரியுது. அதனால் தான் கோவைக்கு செல்கிறார்.
100 முறை மோடி வந்தாலும் ஒன்றும் நடக்காது
பாஜகவை ஒரு பொருட்டாகவே நாம் நினைக்க வேண்டாம். கோவைக்கு அண்ணாமலை சென்றுள்ளார். கரூரில் என்ன நடக்கும் என பயந்து கோவைக்கு சென்றாரோ அதே தான் அங்கும் நடக்கும். தமிழ்நாட்டில் மக்கள் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியாக உள்ளனர். மக்கள் கண்ணீரிலும், தண்ணீரிலும் உள்ளனர். மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எங்களது வரிப்பணம் கொடுங்கள் என கேட்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்,
ஆனால் ஒரு பைசா கூட வரவில்லை. பிரதமர் வந்தாரா வரவில்லை. இப்போது ஏன் 5 முறை தமிழகம் வருகிறார். ஏன் வருகிறார் என்றால் பாஜக தேர்தலை சந்திக்கிறது அதனால் வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது வராத பிரதமர் இப்போ ஏன் வருகிறார். 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் ஒன்றும் நடக்காது என ஜோதிமணி ஆவேசமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்!