VCK Symbol : பானை சின்னத்தில் 1 MP, 4 MLA... குக்கரிலும், சைக்கிளிலும் எத்தனை MP, MLA உள்ளனர்? விசிக கேள்வி

By Ajmal KhanFirst Published Mar 28, 2024, 8:14 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இருந்தும் சின்னம் ஒதுக்கப்படவில்லையென விமர்சனம் எழுந்துள்ளது. 
 

அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது.  அந்தவகையில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இன்று வேட்புமனு பரிசீலனையும், நாளை வாபஸ் பெறுவதும் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு சின்னமானது ஒதுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நாம் தமிழர் கட்சி கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை, 

தேர்தல் ஆணையம் மறுப்பு

இதே போல திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் வழங்கவில்லை. இதற்கு குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே அந்த சின்னம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 2 தொகுதியில் போட்டியிடவுள்ள விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. குறிப்பாக கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதே போல ஒரு எம்பியும் உள்ளனர். அவர்களுக்கும் பானை சின்னம் ஒதுக்கப்படாதது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் நடுநிலை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  

தமாக, அமமுகவிற்கு எத்தனை எம்பி, எம்எல்ஏ.?

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் நவாஸ் வெளியிட்டுள்ள சமூகவளைதல பதிவிர் பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம். 2-க்கு மேல் போட்டியிடும் விசிக பானை கேட்டால் 1% வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது. பானையில் 1 MP, 4 MLA உள்ளோம். குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை MP MLA உள்ளனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

#BREAKING: தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மாரடைப்பால் உயிரிழப்பு!

click me!